1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முழுவதும் பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் எல்லா செயல்களிலும் வெற்றிபெறுவீர்கள். கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மாதம் முழுவதும் வருமானத்திற்குக் குறைவிருக்காது. எதிர்பார்த்த தொகைகள் வந்துசேரும். வியாபாரிகள் அடிக்கடி வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். போட்டி வியாபாரிகளின் தொல்லைகள் மாறும். தொழிலதிபர்கள், தொழிலாளர்களால் பாதிப்பு ஏற்படாதவாறு அவர்களை அனுசரித் துச் செல்லவேண்டிய மாதம். பிள்ளை களுக்கு எதிர்பார்த்த வரன் வந்துசேரும். மாமன், மைத்துனர் பகை நீங்கும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். உடல்நிலையில் இருந்துவரும் மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்கள் கல்வியில் சுறுசுறுப் போடு தேர்வெழுதி உற்சாகமாக இருப்பார்கள். வேலை தேடும் இளைஞர் களுக்கு வேலை கிட்டும். ஒருசில அரசியல் பிரமுகர்கள் எதிர்பார்த்தபடி தலைமையில் பதவியைப் பெறுவார் கள். அரசு ஊழியர் களுக்குப் பணிச்சுமை கூடும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்துசேரும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

Advertisment

மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். எனினும் உயர்ந்த மதிப் பெண்களைப்பெற கடுமையாகப் படிக்கவேண்டி வரும். பெற்றோர்கள்வழியில் மருத்துவச் செலவுகள் வரலாம். கணவன்- மனைவி ஒற்றுமைக்குக் குறைவிருக்காது. தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலைகள் துவங்கும் திட்டம் நிறைவேறும். தொழிலாளர்கள் ஒற்றுமையும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். சிலருக்கு வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். பிள்ளைகளுக்கான திருமணத்தடைகள் நீங்கும். உயர்படிப்பிலுள்ள மாணவர்கள் வேலைக் காகத் தேர்வு செய்யப் பட்டு கைநிறைய சம்பளம் பெறுவார்கள். தொல்லை கொடுத்து வரும் உறவினர்கள் விலகிச் செல்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு ஊழியர்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். மேலதிகாரிகளின் கோபத் திற்கு ஆளாக நேரிடலாம். அரசியல்வாதிகள் பொதுப்பணியில் பாராட் டைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25.

வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

aa

இந்த மாதம் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். இதுவரை வராமலுள்ள பழைய நிலுவைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் வந்துசேரும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். குழந்தையில்லாத தம்பதியர் சிலர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். கணவன்- மனைவி சண்டை நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள், பெற்றோர் சொல்லைக் கேட்க ஆரம்பிப்பார்கள். அரசுப் பணியில் உள்ள வர்களுக்கு வேலைப்பளு கூடும். மேலதிகாரி களின் பாராட்டைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை நல்ல விலைக்கு விற்பார் கள். வியாபாரிகளுக்கு விற்பனை கூடும். ஒருசிலருக்கு கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் வந்து நீங்கும். வெளிநாட்டுக் கடிதத் தொடர்புகள் நல்ல செய்தியைக் கொண்டுவரும். இளைஞர்கள் விடா முயற்சியால் இந்த மாதம் நல்ல வேலையில் அமர்வார்கள். அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவு பெருகும். கனவுத் தொல்லைகள் அதிகம் வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி, அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

Advertisment

மாணவர்கள் எதிர்பார்த்தபடி தேர்வில் கேள்விகள் வரும். நல்ல பதிலளித்து அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். இதுவரை பாடாய்ப்படுத்திய உடல்நலக்கேடுகள் நீங்கும். ஒருசிலரது பெற்றோர்கள், பிள்ளைகளுக்காக உதவ முன்வருவார்கள். கடன் தொந்தரவுகள் நீங்கும். தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தொழில் துவங்கும் திட்டம் நிறைவேறும். வியாபாரிகள், சிறு வியாபாரி களின் போட்டியால் அதிகம் உழைக்க வேண்டிவரும். ஒருசிலருக்கு வெளிநாடு போகும் திட்டம் நிறைவேறும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறுவார்கள். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த நிலுவைப் பணம் வந்துசேரும். பெண்கள் கணவரின் பாராட்டைப் பெறுவார்கள். பிள்ளைகள், பெற்றோர் சொல்படி நடப்பார்கள். ஒருசில அரசியல்வாதிகள் பொதுமக்கள் ஆதரவைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நீங்கள் எண்ணிச் செய்கிற காரியங்கள் அனைத்திலும் வெற்றிகிட்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். கல்வியில் உற்சாகம் ஏற்படும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் வரும். பெற்றோர்வழியில் ஏற்பட்ட மனச் சங்கடங்கள் தீரும். வீட்டில் தடைப்பட்டுவரும் சுபகாரியங்கள் கைகூடும். ஒருசிலர் இழந்த சொத்தை மீட்பார்கள். புதிய வாகனம், வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். தொழிலதிபர்களின் நடவடிக்கைகளுக்கும் எண்ணங் களுக்கும் தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். வியாபாரி களுக்கு வியாபாரம் கூடுதலாக நடக்கும். வெளிநாடு சென்று திரும்பிவராத பிள்ளைகள் வந்துசேர்வார்கள். வேலை தேடும் சிலருக்கு அதற்கான உத்தரவு வீடுதேடி வரும். அரசு ஊழியர்கள் எடுத்த காரியம் நிறைவேறும். அரசியல்வாதிகளில் சிலர் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: விஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இதுவரை தடைப்பட்டுவந்த காரியங் கள் அனைத்தும் தடையின்றி நடக்கும். மனதில் இருந்துவரும் பிரச்சினைகள் அனைத்தும் நல்ல தீர்வுக்கு வரும். நீதிமன்ற வழக்குள்ளவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிட்டும். இதுவரையிலும் இழுபறி யாக இருந்துவரும் பணவரவுகள் முயற்சிக் காமலேயே வந்துசேரும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். தொழிலாளர்கள் ஒற்றுமையால் தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும், நல்ல லாபத்தையும் பெறுவார்கள். வியாபாரிகள் வாங்கியுள்ள சரக்குகள் அனைத்தும் விற்பனையாகும். சிலர் திட்டமிட்டபடி வெளிநாடு செல்வார்கள். திருமணமாகியும் குழந்தைப் பேறில்லாத தம்பதியர் குழந்தை பாக்கியத்தைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அரசியல் பிரமுகர்கள் எதிர்பாராத உதவிகளைத் தலைமையில் பெறுவார்கள். அரசு ஊழியர்களுக்கு பதவியில் இருந்துவரும் தொல்லைகள் மாறும்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

Advertisment

இந்த மாதம் வருவாயைவிட செலவுகள் கூடுதலாகும். கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கவனம் சிதறாமல் படித்துத் தேர்வெழுதுவர். மகனின் செயல்பாடு சரியில்லையே என்று பெற்றோர் கள் வருத்தப்பட்ட சூழ்நிலைகள் மாறி நல்ல நிலைமை வந்துசேரும். பெற்றோர் சொல்லைக் கேட்டு பிள்ளைகள் திருமணத்திற்கு சம்மதிப்பார்கள். தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலை துவங்கிட ஏற்பட்ட தடைகள் நீங்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மருத்துவச் செலவுகள் குறையும். காணாமல்போன பொருட்கள் கிடைக்கும். அரசு ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். மேலதிகாரிகள் தொல்லைக்கு ஆட்படலாம். குறிப்பாக கையூட்டு பெறுபவர்கள் காவல்துறை நடவடிக்கைக்கு ஆட்பட நேரிடலாம். இதுவரை வராமலுள்ள பழைய பாக்கிகள் வசூலாகும். கடிதத் தொடர்பில் அனுகூலமான செய்திகள் வந்துசேரும். அரசியல்வாதிகள் பொதுமக்கள் ஆதரவைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் செலவுகள் அதிகரிக்கும்.

அதற்கேற்ற வரவுகளும் வந்துசேரும். சமூகத்தில் பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். அதனால் உங்கள் செல்வாக்கும் வரவும் கூடும். கணவன்- மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். நீங்கள் வாழமுடியாத ஏமாளி என்று எள்ளி நகையாடியவர்கள் உங்களைச் சரணடைவார்கள். உங்கள் செயல் பாடுகள் மற்றவர்களை வியப்பிலாழ்த்தும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சிபெறுவார் கள். வீட்டில் தடைப்பட்டுவரும் சுப காரியப் பேச்சுகள் தடையின்றி நடக்கும். தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலை துவங்குவார்கள். வியாபாரிகள் புதிதாக கிளை துவங்கி அதிக விற்பனையும் செய்வார் கள். அரசு ஊழியர்களுக்கு வரவேண்டிய நிலுவை பாக்கிகள் வந்துசேரும். பிரிந்து வாழும் தம்பதியர் வழக்கு இல்லாமலேயே ஒன்றுசேர்வார்கள். தொழில் போட்டி யாளர்கள் நஷ்டப்பட்டு ஓடிவிடுவார்கள். பிள்ளைகள், பெற்றோர் சொல்லைக் கேட்டு காதலைக் கைவிடுவார்கள். தூர தேசத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். மகான்களின் தரிசனம் கிட்டும். அரசியல்வாதிகளின் அடக்கமான அணுகுமுறையை மக்கள் பாராட்டுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

பிள்ளைகள் சமூகத்தால் பாராட்டப் படும் செய்திகேட்டு பெற்றோர் மகிழ்ச்சி கொள்வர். இதுவரை உங்களுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் உறவுகள், இனி உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் கிடைத்து கூடுதல் உற்பத்தியும், லாபமும் பெறுவார்கள். வியாபாரிகள் கொள்முதலை அதிகம் செய்து, அதிக லாபத்தைப் பெறுவார்கள். நல்ல வரன்கள் வீடுதேடி வரும். உடன்பிறந்த வர்களிடையே இழுபறியாக இருந்துவரும் சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். உயர்படிப்பிலுள்ள மாணவர்கள் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டு நல்ல சம்பளமும் பெறுவார்கள். இதுவரை வாட்டி வதைத்துவந்த பிணிகள் விலகும். உடல் ஆரோக்கியம் கூடும். தெய்வதரிசனம் செய்ய வெளியூர் செல்லும் எண்ணம் நிறைவேறும். இளைஞர்கள் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச் செந்தூர் முருகன்.

செல்: 94871 68174